Thursday, February 28, 2013

இலங்கை: தமிழ் கைதிகள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாதல்



தமிழீழ விடுதலைப் புலிகள் (எல்ரீரீஈ) என சந்தேகிக்கப்பட்ட உறுப்பினர்களையும் அதன் ஆதரவாளர்களையும் துன்புறுத்துவதற்கு இலங்கையின் ஆயுதப் படைகள் பாலியல் வல்லுறவையும் ஏனைய பாலியல் வன்முறைகளையும் பிரயோகித்து வந்துள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு (Human Rights Watch)இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவடைந்த ஆயுதப் போராட்டத்தின் போது சிறையில் பரந்தளவில் பாலியல் வல்லுறவுகள் நிகழ்ந்து வந்தன எனவும், அதே வேளையில் அரசியல் நோக்குடனான பாலியல் வன்முறைகள் இராணுவத்தினாலும் போலீஸ் படையினாலும் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது எனவும் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு கண்டறிந்தது.


“நாங்கள் உங்களுக்கு ஒரு பாடம் புகட்டுவோம்’: இலங்கை ஆயுதப் படைகளின் மூலம் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட பாலியியல் வன்முறை’” என்ற 144 பக்க அறிக்கையானது இலங்கை முழுவதிலுமுள்ள உத்தியோகபூர்வமான மற்றும் இரகசியமான தடுப்பு முகாம்களில் 2006-2012 ஆம் ஆண்டு வரை நிகழ்ந்த பாலியல் வல்லுறவுகள் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் ஆகியவற்றுக்கு எதிரான 75 பேர்களின் குற்றச்சாட்டுக்கள் பற்றிய விரிவான விபரங்களை தருகின்றது. மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு ஆவணப்படுத்திய விடயங்களில், பல நாட்களாக அடிக்கடி பல நபர்களினாலும், இராணுவத்தினாலும், போலீஸ் படையினாலும், மற்றும் அடிக்கடி பங்குகொள்ளுகின்ற அரசாங்க சார்பு துணை இராணுவக் குழுக்களினாலும் தமிழ் ஆண்களும் பெண்களும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு சித்திரவதை செய்யப் பட்டிருப்பதாகப் பதிவாகியிருக்கின்றது. “இலங்கையின் பாதுகாப்புப் படைகள் கூறவியலாத எண்ணிக்கை அளவுக்கு சிறையில் தமிழ் ஆண்களையும் பெண்களையும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி சித்திரவதைக்கு உட்படுத்தியுள்ளனர்” என மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவின் ஆசிய பிராந்தியத்திற்கான பணிப்பாளர் ப்ராட் அடம்ஸ் (Brad Adams) கூறினார். “இவை சாதாரண யுத்தகால அட்டூழியங்கள் அல்ல, தற்பொழுதும் அந்த அட்டூழியச் செயல்கள் தொடர்ந்தும் நிகழ்ந்து வருவதோடு, எல்ரீரீஈ தரப்புடன் தொடர்பு இருப்பதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படும் ஒவ்வொரு தமிழ் ஆணையும் பெண்ணையும் இது கடும் ஆபத்தில் தள்ளிவிடுவதாக அமைகின்றது”.




பாலியல் வல்லுறவுக்கு ஆளான அனேகமானோர் இலங்கைக்கு வெளியால் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவுடன் தொடர்புகொண்டு, தமக்குச் செய்யப்பட்ட அட்டூழியங்களை மருத்துவ மற்றும் சட்டமுறை அறிக்கைகளின் மூலம் உறுதிப்படுத்தினார்கள். இவர்கள் அனைவரும் பாலியியல் வன்முறைக்கு அப்பால் துன்புறுத்தப்பட்டும் கொடுமைப்படுத்தப்பட்டும் உள்ளனர். மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவுக்கு இலங்கையில் வெளிப்படையான ஒரு ஆய்வை நடாத்தவோ அல்லது இன்னும் சிறையிலிருக்கின்ற மக்களை நேர்காணவோ முடியாமல் போனதால், இத்தகைய சம்பவங்கள் அநேகமாக அரசியல் நிகழ்வுகளாக, சிறை நிகழும் பாலியல் வல்லுறவுகளின் மிகச்சிறிய ஒரு பகுதியை மாத்திரமே பிரதிபலிப்பதாக அமைகின்றன.

ஒரு தனியாள் இனம் தெரியாத நபர்களினால் வீட்டிலிருந்து கடத்தப்பட்டு, ஒரு தடுப்பு முகாமுக்குக் கொண்டுசெல்லப்பட்டு, எல்ரீரீஈ செயற்பாடுகள் பற்றி தகாத முறையில் விசாரிக்கப்படுதல் என்கின்ற விதத்திலேயே அதிகமான சம்பவங்கள் தொடர்ந்துள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு கூறியது. வெளிநாட்டிலிருந்து அண்மையில் நாடு திரும்பியிருந்த 23 வயதுடைய ஒரு நபர், தான் எந்த விதமான குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்யப்படாத நிலையில் கடத்தப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் ஒரு ஒப்புதல் வாக்குமூலத்தில் தான் கையொப்பமிடும் வரை மூன்று நாட்கள் தொடர்ச்சியாகக் கொடுமைப்படுத்தப்பட்டதாகவும் கூறினார். 32 வயதுடைய ஒரு பெண், சிவில் உடையில் வந்த இரண்டு ஆண்களினால் தான் கைதுசெய்யப்பட்டு, தனது ஆடைகள் களையப்பட்ட நிலையில் நிர்வானமாக தன்னை புகைப்படம் எடுத்ததாகக் கூறினார். “அனைத்தையும் பற்றி ஒப்புதல் வாக்குமூலம் அளிக்குமாறு அந்த நபர்கள் என்னிடம் கூறினார்கள்” என அந்தப் பெண் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவிடம் முறையிட்டார். “அவர்கள் என்னைக் கொலைசெய்து விடுவார்கள் என்று நினைத்ததால் நான் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க மறுத்தேன். நான் தொடர்ச்சியாக அடிக்கப்பட்டுத் துன்புறுத்தப்பட்டேன். இரண்டாவது நாள் ஒரு நபர் எனது அறைக்கு வந்து என்னை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார். ஆகக்குறைந்தது மூன்று நாட்களாக நான் பலராலும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டேன். எத்தனை தடவைகள் என்பது எனக்கு நினைவில்லை”.

பாலியியல் துஷ்பிரயோகமானது, சந்தேகிக்கப்பட்ட எல்ரீரீஈ உறுப்பினர்களையும் அதன் ஆதரவாளர்களையும் துன்புறுத்துவதற்கும் கொடுமைப்படுத்துவதற்கும் பரந்தளவில் பயன்படும் முக்கிய ஒரு அங்கமாக விளங்கியுள்ளது என்பது எதைச் சுட்டிக்காட்டுகின்றது எனில், ஆயுதப் போராட்டத்தின் போதும் அதே நேரம் எப்பொழுதும் ஆயுதப் படைகளினால் கைதுசெய்யப்படும் ஆண்களும் பெண்களும் பாலியல் வல்லுறவுக்கும் ஏனைய பாலியியல் வன்முறைக்கும் பலியாகுகின்றனர் என மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு கூறியது. எல்ரீரீஈ செயற்பாடுகளில் ஈடுபாடு,மற்றும் துணைவர்களும் உறவினர்களும் அடங்கலாக ஏனையவர்கள் தொடர்பான தகவல்கள் பற்றியும் ‘ஒப்புதல் வாக்குமூலங்களை’ பெறுவதற்கும் அதே நேரம் எல்ரீரீஈ தரப்புடன் தொடர்புவைப்பதை அதைரியப்படுத்தும் வகையில் பரந்தளவில் தமிழ் மக்கள் மத்தியில் அச்சத்தைத் திணிப்பதற்கும் என்றே இந்தச் சித்திரவதைகள் நிகழ்த்தப்பட்டதாக கருதப்படுகின்றது.



தாம் அடிக்கப்பட்டதாகவும், தனது கைகளைக் கட்டித் தொங்கவிடப்பட்டதாகவும், பகுதியளவில் மூச்சுத்திணற வைக்கப்பட்டதாகவும், எரியும் சிகரெட்டுக்களினால் சூடுவைக்கப்பட்டதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் மேலும் விவரித்தனர். மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவுடன் கதைத்தவர்களில் எவருமே தடுத்துவைக்கப்பட்ட நேரத்தில் சட்ட ஆலோசனையையோ, குடும்ப அங்கத்தவர்களையோ அல்லது மருத்துவர்களையோ நாடுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. துஷ்பிரயோகம் முற்றுப்பெறும் என எண்ணி ஒப்புதல் வாக்குமூலத்தில் கையொப்பமிட்டாலும் பாலியல் வல்லுறவு அடங்கலாக சித்திரவதைகள் அடிக்கடி தொடர்ந்ததாகவே அநேகமானோர் கூறினர். நேர்காணப்பட்ட தனி நபர்கள் எவரும் முறையாக விடுவிக்கப்படவில்லை, ஆனால் மாறாக உறவினர் ஒருவர் உயர் அதிகாரிகளுக்கு இலஞ்சத்தை வழங்கிய பின்னர் ‘தப்பியோடுவதற்கு’ அனுமதிக்கப்பட்டனர்.

“இரண்டு அதிகாரிகள் எனது கைகளை பின்னால் மடக்கிப்பிடித்து [அதே வேளையில்] ஒரு மூன்றாவது அதிகாரி எனது ஆண்குறியைப் பிடித்து அதனுள் ஒரு உலோகக் கம்பியைத் திணித்தார்” என 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் அரசாங்கப் படைகளிடம் சரணடைந்த ஒருவர் கூறினார். “அவர்கள் எனது ஆண்குறியினுள் சிறிய உலோகக் குண்டுமணிகளைத் திணித்தனர். நாட்டை விட்டுத் தப்பி வந்த பின்னர் இந்தக் குண்டுமணிகளை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டியிருந்தது”. ஒரு மருத்துவ அறிக்கை இவரின் வாக்குமூலத்தை உறுதிசெய்கின்றது.

அவர்கள் செய்த குற்றத்தை தாம் வெளிப்படுத்தினால் பொதுவாக குற்றம் புரிந்தவர்களிடமிருந்து பதிலடி கிடைக்கும் என்றும் சமூகத்தில் இகழப்படுவோம் என்னும் பய உணர்வுமே தம்மீது நிகழ்த்தப்பட்ட துஷ்பிரயோகம் பற்றி தங்களை அமைதியாகவிருக்கச் செய்ததாக மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவிடம் கதைத்த பலவந்த பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட ஆண்களும் பெண்களும் கூறினார்கள். பாலியல் வல்லுறவு சம்பவங்கள் பற்றி பயனுள்ள விதத்தில் அறிக்கையிடுவதையும் விசாரணை செய்வதையும் தடுக்கும் வகையில் இலங்கை அரசாங்கத்தினால் திணிக்கப்பட்ட நிறுவனசார் தடைகளும் பாலியல் துஷ்பிரயோகத்தைப் பற்றி அறிக்கையிடும் தயக்கத்திற்கு மூலகாரணமாக அமைந்தன.

“பாலியல் வல்லுறவு பலியானவர்களுக்கான மருத்துவ மற்றும் உளவியல் சிகிச்சைகளையும் அரசாங்கம் முடக்கியது” என அடம்ஸ் கூறினார். “வடக்கில் அதிகளவில் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் பாலியல் வன்முறைக்கு ஆளாகித் தப்பிப்பிழைத்தவர்களுக்கு உள்நாட்டு மற்றும் சர்வதேச நிறுவனங்கள் வழங்குகின்ற சேவைகளையும் இராணுவம் சூட்சுமமான முறையில் தடைசெய்துள்ளது”.

போராட்டத்தின் இறுதி ஆண்டுகளில் அல்லது போர் முடிவுக்குப் பின்னர் சிறையில் நிகழ்ந்த பாலியல் வல்லுறவுகள் தொடர்பில் ஆயுதப் படைகளில் எவருக்கும் எதிராக வழக்குத் தொடரப்படவில்லை என்பதுடன் குற்றம் செய்தவர்கள் குற்றத்திற்கு தண்டனையின்றி சுதந்திரமாகவிருக்கின்றனர் எனவும் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு கூறியது.

தாங்கள் அரச பாதுகாப்புப் படைகளின் உறுப்பினர்கள் என்பதை மறைப்பதற்கு இராணுவமும் போலீஸும் மிகக் குறைந்தளவு முயற்சியையே மேற்கொண்டனர் என நேர்காணப்பட்டவர்கள் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவிடம் கூறினார்கள். குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (C.I.D.)பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவு (T.I.D.) போன்ற விசேட பிரிவுகள் உள்ளிட்ட இராணுவத்தினர், இராணுவத் துப்பறியும் பிரிவினர் மற்றும் போலீஸ் முதலிய தரப்புகள் இவர்களில் அடங்குகின்றனர். இந்த அரச திணைக்களங்களின் உறுப்பினர்கள் ஒன்றாக இணைந்தும் தகாத முறையில் விசாரணைகளை நடாத்தினர் என பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்தும் அறிக்கையிட்டனர். இவர்கள் துஷ்பிரயோகம் நிகழ்ந்த குறித்த முகாம்களையும் தடுப்பு ஸ்தலங்களையும் அடையாளம் காட்டினார்கள்.

பாலியல் வன்முறையைப் பிரயோகித்தல் என்பது ஒரு சாதாரண கீழ்மட்டத்து நிகழ்வாகவோ அல்லது அயோக்கியத்தனமான பாதுகாப்புப் படையினர் சிலரின் செயல்களாகவோ காணப்படவில்லை, ஆனால் மாறாக உயர் மட்ட அதிகாரிகளினால் அறிந்த அல்லது அறிந்துகொள்ளப்பட்டிருக்க வேண்டியதான பரந்தளவில் நிகழ்ந்த வழக்கமான ஒரு செயலாக காணப்பட்டுள்ளதையே இந்தச் சம்பவங்கள் சுட்டிக்காட்டுவதாக மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு கூறியது. மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவுக்கு அறிக்கையிடப்பட்ட சம்பவங்கள் இலங்கையின் வட பிராந்திய யுத்தகளப் பகுதிகளில் மாத்திரமன்றி தலைநகரமான கொழும்பிலுள்ள இராணுவ முகாம்களிலும், போலீஸ் நிலையங்களிலும் அதே நேரம் யுத்த பிரதேசங்களுக்கு தூரத்திலுள்ள தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளின் ஏனைய இடங்களிலும் நிகழ்ந்தன. கொழும்பிலுள்ள C.I.D தலைமை அலுவலகத்தின் கெடுதிக்குப் பெயர்போன நான்காவது மாடியும் T.I.Dஆறாவது மாடியும் இவற்றில் அடங்கியிருந்தன.

ஆயுத மோதல்களின் ஒரு பாகமாகப் புரியப்பட்ட பாலியல் வல்லுறவு செயல்கள் மற்றும் ஏனைய பாலியல் வன்முறைகள் என்பன போர் குற்றங்களாகும். அத்தகைய வன்முறைகளைத் தடுப்பது மாத்திரமன்றி, துஷ்பிரயோகம் பற்றிய நம்பகமான குற்றச்சாட்டுக்களை விசாரித்து அந்தக் குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையை எடுப்பதும் இலங்கை அரசாங்கத்தின் ஒரு கடப்பாடாகும். அத்தகைய துஷ்பிரயோகங்களை அறிந்திருந்த அல்லது அறிந்திருக்க வேண்டிய அதிகாரிகள்கூட நடவடிக்கையை எடுக்கத் தவறியிருந்தனர். இதனால், கட்டளையிடும் பொறுப்பு விடயம் என்ற ரீதியில் அவர்களும் குற்றம் புரிந்தவர்கள் ஆகுகின்றார்கள்.

யுத்தகாலத் துஷ்பிரயோகங்களுக்கான நியாயத்தையும் பொறுப்புக்கூறும் தன்மையையும் முன்வைப்பதற்கான 2012 மார்ச் மாதத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்ட தனது பொறுப்புக்களை இலங்கை அரசாங்கம் போதியளவில் பின்பற்றி நிறைவேற்றியதா என்பது பற்றி ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபை பெப்ரவரி மாதத்தில் விசாரணை செய்யும். ஒரு சுயாதீன சர்வதேச விசாரணையை நடாத்துமாறு மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகரை இந்த சபை பணிக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு கூறியது.

“பாதுகாப்புப் படையினரால் நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறைக் குற்றச்சாட்டுக்கள் ‘பொய்’ அல்லது ‘எல்ரீரீஈ சார்பான பிரச்சாரம்’ என எண்ணி அரசாங்கம் தனது படையினரை விடுவித்துள்ளமையே அரசாங்கத்தின் பதிலாகவிருக்கின்றது” என அடம்ஸ் கூறினார். “இந்தக் கொடூரமான குற்றங்களைப் பற்றி அரசாங்கத் தரப்பில் எவர்கள் அறிந்திருப்பார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் தொடர்ந்து இடம்பெற்றுவரும் இந்தத் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக நடவடிக்கையை எடுக்க அரசாங்கம் தவறியிருக்கின்றமையானது ஒரு சர்வதேச விசாரணை அவசியம் என்பதற்கு மேலும் சான்றாக அமைகின்றது”.

“நாங்கள் உங்களுக்கு ஒரு பாடம் புகட்டுவோம்”: இல் இருந்து பெறப்பட்டவை

தலைப்பெழுத்துக்கள் அனைத்தும் புனைப்பெயர்களாகவும் நபரின் உண்மையான பெயருக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லாததாகவும் இடப்பட்டுள்ளன.

ஜே எச் (JH) என்பவரின் சம்பவம்

ஜே எச் (JH) என்பவர் 23 வயதுடைய ஒரு தமிழர். இவர் ஐக்கிய இராச்சியத்தில் கல்வி கற்றுக்கொண்டிருந்த நேரம் 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் குடும்பம் சார்ந்த காரணங்களுக்காக கொழும்புக்குத் திரும்பினார். ஒரு மாதம் கழிந்த பின்னர், வேலை விட்டு வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்த நேரத்தில், ஒரு வெள்ளை வேனில் வந்த பலர் அதிலிருந்து குதித்தார்கள். ஒரு விசாரணைக்கு தான் தேவைப்படுவதாகக் கூறி, அவர்கள் தனது கண்களைக் கட்டி, ஒரு மணித்தியாலத்திற்கும் அதிகமான நேரம் பயணித்து, தெரியாத ஒரு இடத்திற்கு தன்னை எடுத்துச்சென்றதாக அவர் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவிடம் கூறினார்:

கட்டியிருந்த எனது கண்களை அவர்கள் அவிழ்த்துவிட்ட [போது] நான் அங்கு ஏனைய நான்கு நபர்கள் இருந்த ஒரு அறையைக் கண்டேன். நான் ஒரு நாற்காலியில் கட்டப்பட்டு எல்ரீரீஈ தரப்புடன் எனக்கிருக்கும் தொடர்புகள் பற்றியும் அண்மையில் வெளிநாட்டிற்குசென்ற காரணம் பற்றியும் விசாரிக்கப்பட்டேன். அவர்கள் எனது ஆடைகளை உரிந்து என்னை அடிக்கத் தொடங்கினார்கள். நான் மின்சாரக் கம்பிகளினால் அடிக்கப்பட்டு, எரியும் சிகரட்டுக்களினால் சூடுவைக்கப்பட்டு, பெற்றோல் திணிக்கப்பட்ட ஒரு பொலித்தின் உறையைக் கொண்டு மூச்சுத்திணறடிக்கப்பட்டேன். பின்னர் அந்த இரவு, நான் ஒரு சிறிய அறையில் அடைக்கப்பட்டேன். தொடர்ச்சியாக மூன்று நாட்கள் நான் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டேன். முதலாவது இரவு, ஒருவர் தனியாக வந்து என்னை குதவழியாகப் பாலியலுறவுக்கு உட்படுத்தினார். இரண்டாம் மற்றும் மூன்றாம் நாள் இரவுகளில், இரண்டு பேர் எனது அறைக்கு வந்தார்கள். அவர்கள் என்னை குதவழியாகப் பாலியலுறவுக்கு உட்படுத்திவிட்டு அவர்களுடன் வாய்வழிப் பாலியல் உறவுக்கும் என்னை வற்புறுத்தினார்கள். இந்தப் பாலியல் வல்லுறவுகளின் பின்னர் எல்ரீரீஈ தரப்புடன் எனக்கு தொடர்புகளிருப்பதாக ஒப்புக்கொண்டு ஒரு வாக்குமூலத்தில் நான் கையொப்பமிட்டேன்.

ரீ ஜே (TJ ) என்பவரின் சம்பவம்

ரீ ஜே (TJ ) என்பவர் 19 வயதுடைய ஒருவர். இவர் ஐக்கிய இராச்சியத்தில் தனது கற்கைகளைப் பூர்த்திசெய்து விட்டு இலங்கைக்குத் திரும்பியவர். 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு மாலை நேரத்தில், ரீ ஜே (TJ ) வவுனியாவில் (Vavuniya) ஒரு நண்பரைச் சந்தித்து விட்டு வீடு திரும்பிய நேரத்தில் அவருக்கு அருகில் ஒரு வெள்ளை வேனை நிறுத்தி சிவில் உடைகளை அணிந்திருந்த ஏறக்குறைய ஐந்து அல்லது ஆறு நபர்கள் அதிலிருந்து குதித்தார்கள். அவர்கள் ரீ ஜே (TJ ) ஐ பலவந்தமாக இழுத்து வேனினுள் தள்ளி, அவரின் கண்களைக் கட்டி, தெரியாத ஒரு இடத்திற்கு அவரை கொண்டுசென்றார்கள் என அவர் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவிடம் கூறினார்:

கட்டியிருந்த எனது கண்களை அவர்கள் அவிழ்த்துவிட்ட போது நான் ஒரு அறையில் இருப்பதைக் கண்டேன். அங்கு ஐந்து பேர் இருந்தனர். அவர்களில் ஒருவர் இராணுவ சீருடையில் காணப்பட்டார். ஐக்கிய இராச்சியத்தில் எல்ரீரீஈ தரப்புடன் எனக்குள்ள அலுவல் பற்றி அவர்கள் என்னிடம் விசாரிக்கத் தொடங்கினார்கள். வெளிநாட்டில் எல்ரீரீஈ தரப்புடன் எனக்கிருக்கின்ற தொடர்புகள் பற்றி அவர்கள் என்னிடம் வினவினார்கள். நான் பதிலளிக்கவில்லை. அவர்கள் என்னைத் துன்புறுத்தத் தொடங்கினார்கள். முதலில் அறையப்பட்டும் குத்தப்பட்டும் நான் தாக்கப்பட்டேன். அப்போது அவர்கள் என்னைக் கடுமையாகத் துன்புறுத்தத் தொடங்கினார்கள். எனக்கு தடிகளால் அடிக்கப்பட்டு, எரியும் சிக்கரெட்டுக்களால் சூடுவைக்கப்பட்டதுடன் எனது தலை ஒரு நீர் பீப்பாயினுள் அமிழ்த்தப்பட்டது. கேள்விகள் கேட்கப்பட்ட நேரத்தில் உடைகள் உரியப்பட்டு நிர்வாணமாக்கப்பட்டேன்.

அடிகளும் துன்புறுத்தல்களும் அடுத்த நாளும் தொடர்ந்தன. காலையில் எனக்கு கொஞ்சம் தண்ணீர் மாத்திரம் கொடுக்கப்பட்டது. அடுத்த இரவு, எனக்கு உடைகள் கொடுக்கப்பட்டு ஒரு சிறிய இருள் நிறைந்த அறையில் அடைக்கப்பட்டேன். அந்த இரவில் எனது அறைக்குள் ஒரு நபர் நுழைந்தார். அறை இருளாகவிருந்ததால், அவரை என்னால் பார்க்க முடியவில்லை. அவர் எனது தலையைப் பிடித்து சுவரில் பலமாக அடித்து, எனது முகத்தை சுவருக்கு எதிரே தள்ளி என்னைப் பலவந்தமாகக் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கி சித்திரவதைப்படுத்தினார்.

ஜீ டி (GD) என்பவரின் சம்பவம்

ஜீ டி (GD) என்பவர் 31 வயதுடைய ஒரு தமிழ் பெண். இவர் கொழும்பின் ஒரு சுற்றுப்புறத்திலுள்ள தனது வீட்டிலிருந்த போது 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் சிவில் உடைகளில் நான்கு பேர் வந்திறங்கினார்கள். அவர்கள் C.I.D.அதிகாரிகள் என அவர்களை அறிமுகப்படுத்தி தனது வீட்டிலிருந்த குடும்ப அங்கத்தவர்கள் அனைவரினதும் அடையாள அட்டைகளை சோதனையிட வேண்டும் என எங்களிடம் கேட்டார்கள் என ஜீ டி (GD) என்பவர் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவிடம் கூறினார். வெளிநாட்டிலிருந்த தனது கணவனின் அடையாள அட்டையைப் பறித்துவிட்டு அவர்கள் தன்னை விசாரணைக்கு வருமாறு அழைத்ததாக அவர் கூறினார்:

கொழும்பிலுள்ள C.I.D. அலுவலகத்தின் நான்காவது மாடிக்கு நான் கொண்டுசெல்லப்பட்டு ஒரு அறையில் அடைத்து வைக்கப்பட்டேன். எந்தவிதமான உணவோ அல்லது தண்ணீரோ எனக்குக் கொடுக்கப்படவில்லை. அடுத்த நாள், சீருடை அணிந்து ஆயுதம் தாங்கிய ஒரு அதிகாரி அடங்கலாக அதிகாரிகள் என்னைப் புகைப்படம் எடுத்துவிட்டு, எனது விரல் அடையாளங்களையும் பெற்றுக்கொண்டு, ஒரு வெறும் தாளில் கையொப்பமிடுமாறு செய்தார்கள். எனது கணவரின் விபரங்கள் எல்லாம் அவர்களிடம் இருப்பதாகக் கூறி அவர் இருக்கின்ற இடத்தைச் சொல்லுமாறு என்னிடம் கேட்டவண்ணமிருந்தார்கள். எனது கணவன் வெளிநாட்டில் இருப்பதாக நான் அவர்களிடம் கூறிய போது, அவர் எல்ரீரீஈ தரப்பின் ஆதரவாளர் எனத் தொடர்ந்தும் அவரைக் குற்றஞ்சாட்டினார்கள். பல பொருள்களைக் கொண்டு நான் அடிக்கப்பட்டேன். விசாரிக்கப்பட்ட நேரத்தில் எனக்கு ஒரு எரியும் சிக்கரெட்டினால் சூடுவைக்கப்பட்டது. திரும்பத்திரும்ப நான் கன்னத்தில் அறையப்பட்டு, மணல் நிரப்பப்பட்ட ஒரு குழாயினால் அடிக்கப்பட்டேன். அடித்த போதெல்லாம் அவர்கள் எனது கணவரின் விபரங்களைக் கொடுக்குமாறு என்னிடம் கேட்டார்கள். ஒரு இரவு நான் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டேன். சிவில் உடைகளில் எனது அறைக்கு இரண்டு பேர் வந்தார்கள். அவர்கள் இருவரும் எனது உடைகளைக் கிழித்து என்னைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார்கள். அவர்கள் சிங்களத்தில் கதைத்தார்கள், அதனால் எனக்கு எதுவும் புரியவில்லை. இருளாக இருந்ததால் அவர்களின் முகங்களை என்னால் தெளிவாகப் பார்க்க முடியவில்லை.

டி எஸ் (DS) என்பவரின் சம்பவம்

டி எஸ் (DS) என்பவரின் தந்தைக்கு யாழ்ப்பாணத்தில் போட்டோ பிரதியெடுக்கும் (Photocopy) ஒரு கடை சொந்தமாகவிருந்தது. இவர் பிரச்சாரத் துண்டுப்பிரசுரங்களை அச்சிட்டு அவற்றை விநியோகிப்பதன் மூலம் எல்ரீரீஈ தரப்புக்கு உதவினார். 2005 ஆம் ஆண்டில், DS என்பவர் 13 வயதாகவிருந்த போது எல்ரீரீஈ தரப்பினால் பலவந்தமாகக் கொண்டுசெல்லப்பட்டு 10 நாட்களாக அவருக்கு கட்டாய இராணுவப் பயிற்சி வழங்கப்பட்டது. அவர் யாழ்ப்பாணத்திற்குத் திரும்பிய பின்னர், எல்ரீரீஈ தரப்பின் கலாச்சார விழாக்களில் பங்குபற்றியும் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தும் எல்ரீரீஈ தரப்பினருக்காக உழைத்தார். 2009 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், இவர் 17 வயதாகவிருந்த போது, பாடசாலை விட்டுத் திரும்பிக்கொண்டிருந்த நேரத்தில் போலீஸும் இராணுவ அதிகாரிகளும் இணைந்த ஒரு குழுவினர் இவரைக் கைதுசெய்தனர். இவரின் கண்கள் கட்டப்பட்டு தெரியாத ஒரு தடுப்பு நிலையத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டார் என DS என்பவர் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவிடம் கூறினார்:

எல்ரீரீஈ தரப்புடன் எனக்கிருக்கின்ற செயற்பாடுகள் அனைத்தையும் பற்றி அவர்கள் என்னிடம் வினவினார்கள். அந்தத் தரப்புக்கான எனது உழைப்புப் பற்றி எல்லா விடயங்களையும் அவர்களிடம் கூறினால், தன்னை வெளியில்செல்ல அனுமதிப்பதாக அவர்கள் கூறினார்கள். நான் எதையும் ஏற்க மறுத்தேன். அப்போது அவர்கள் என்னை அடிக்கத் தொடங்கினார்கள். நான் சப்பாத்துக்களினால் மிதிக்கப்பட்டுக் குத்தப்பட்டேன். அப்போது எனது உடைகளை முழுமையாகக் கழற்றுமாறு அவர்கள் என்னை வற்புறுத்தினார்கள். என்னைத் தலைகீழாகத் தொங்கவிட்டு எரியும் சிக்கரெட்டுக்களினால் எனக்கு சூடுவைக்கப்பட்டது. நான் மணல் நிரப்பப்பட்ட குழாய்களையும் முள்ளுக்கம்பிகளைக் கொண்டு தாக்கப்பட்டேன். அதிகாரிகள் எனது பாதங்களை தனியாக வைத்து மிதித்தும் பெற்றோல் திணிக்கப்பட்ட ஒரு ப்ளாஸ்டிக் பையை எனது தலையில் பலமாக இட்டு என்னை மூச்சுத்திணறச் செய்யவும் முனைந்தனர்.

ஒரு அதிகாரி எனது முன்னிலையில் பாலியல் செயல்களைச் செய்தார். அப்போது என்னை அவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார். அங்கு எந்தவித மலசலகூடமும் இருக்கவில்லை. ஒரு ப்ளாஸ்டிக் பையை நான் பயன்படுத்த வேண்டியிருந்தது. என்னை விசாரித்த அதிகாரிகள் என்னை நித்திரைசெய்ய விடவில்லை. முதல் இரண்டு மூன்று நாட்களுக்கு அவர்கள் எனக்கு எந்தவிதமான உணவையும் தரவில்லை. அவர்கள் எனது கைவிரல் அடையாளத்தைப் பெற்றுக்கொண்டு என்னைப் புகைப்படமெடுத்தார்கள். நான் இறுதியாக சிங்கள மொழியிலிருந்த ஒரு வாக்குமூலத்தில் கையொப்பமிட்டு அவர்கள் கூறிய எல்லவாற்றையும் ஒப்புக்கொண்டேன்.


நன்றி:மனித உரிமைகள் கண்காணிப்பகம்

Saturday, February 23, 2013

பிப்ரவரி 27, 2013 புதன்கிழமை அன்று முற்றுகைப் போராட்டம்


அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்
இடிந்தகரை 627 104
திருநெல்வேலி மாவட்டம்   

                 
பிப்ரவரி 27, 2013 புதன்கிழமை அன்று முற்றுகைப் போராட்டம்

கூடங்குளம் அணுமின் நிலயத்தைப் பற்றிய உண்மைத் தகவல்களை மக்களுக்குத் தெரிவிக்காமல்,யூகங்களையும், வதந்திகளையும் பரவவிட்டு மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது அணுசக்தித் துறை. மத்திய, மாநில அரசுகளும் கைகட்டி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

தகவல்கள் தராமல், பேரிடர் பயிற்சி தராமல், நம்மை துச்சமாக நடத்தும் மத்திய, மாநில அரசுகளுக்கும்,அணுசக்தித் துறைக்கும் நமது எதிர்ப்பைத் தெரியப்படுத்தவும்யுரேனியம் நிரப்பப்பட்டு ஆபத்தான நிலையில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தை உடனடியாக கைவிடக் கோரியும், அணுமின் நிலையத்தில் நிரப்பப்பட்டுள்ள யுரேனியத்தை அகற்றவும், கூடங்குளம் திட்டத்தை சூரிய சக்தி, காற்றாலைகள், கடலலை மின் நிலையங்கள் கொண்ட தேசிய மாதிரி எரிசக்திப் பூங்காவாக மாற்றக் கோரியும் எதிர்வரும் பிப்ரவரி 27,2013 புதன்கிழமை அன்று தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மூன்றிலும் முற்றுகைப் போராட்டம் நடத்துவதென முடிவு செய்திருக்கிறோம்.


தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி துறைமுகமும், திருநெல்வேலி மாவட்டம் இடிந்தகரையில் அணுமின் நிலையமும், கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னியாகுமரியிலுள்ள பூம்புகார் படகுப் போக்குவரத்து நிலையமும் முற்றுகை இடப்படும். நமது ஆதரவாளர்கள், அமைப்புக்கள், இயக்கங்கள், கட்சிகள் தமிழகத்தின் பிற இடங்களில் ஆர்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்தி கூடங்குளம் அணுமின் நிலயத்தை மூட ஒத்துழைக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

போராட்டக்குழு,
அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்.

-------------

Friday, February 22, 2013

ஊடக அறிக்கை - தோழர் சரவணக்குமார் கைது குறித்து




மரண தண்டனைக்கு எதிராக தொடர்ந்து களப்பணியாற்றிக் கொண்டிருக்கும் சேவ் தமிழ்சு இயக்கத்தைச் சார்ந்த ஐந்து தோழர்கள் தூக்கு தண்டனை கைதிகளாக வேலூர் மத்திய சிறையில் இருக்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரையும் நேற்று காலை (21 பிப்ரவரி 2013) சந்திக்கச் சென்றனர். அவர்களுக்கு கொண்டு செல்வதற்காக முன் தினம் இரவே தோழர் சரவணக்குமார் சென்னையில் இனிப்புகளை வாங்கி வைத்திருந்தார். அந்தப் பையில் தவறுதலாக அவருடைய மொபைல் போன் பேட்டரியையும், சார்ஜரையும் வைத்திருந்திருக்கிறார். அடுத்த நாள் சிறைக்கு செல்லும்போது அந்த பையை அப்படியே எடுத்து சென்றுவிட்டார். முதல் நுழைவாயிலில், ’உள்ளே சோதனை நடத்தப்படும்’ என்று கூறி அனுமதித்தனர். சோதனையின் போது சிறைக்காவலர்கள் பேட்டரியையும் சார்ஜரையும் பார்த்து, சிறை கண்காணிப்பாளரிடம் காண்பிக்க வேண்டும் என்று கூறி எடுத்து வைத்துவிட்டு, தோழர்களை மட்டும் உள்ளே செல்ல அனுமதித்தனர். பேரறிவாளன் , முருகன் இருவரிடம் சுமார் 30 நிமிடங்கள் ஐந்து தோழர்களும் கலந்துரையாடினர். கலந்துரையாடலுக்கு இடையில் உள்ளே வந்த காவலர்கள் பேட்டரி,சார்ஜர் யாருடையது என்று கேட்டு சரவணக்குமாரைத் தனியாக சிறை கண்காணிப்பாளர் அறைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். சிறிது நேரத்திற்குப் பின் வெளியே வந்த சரவணகுமார் உடன் சென்ற மற்ற தோழர்களிடம் ’எழுதி வாங்கி விட்டு அனுப்பி விடுவார்கள்’ என்று கூறிச் சென்றுள்ளார். அதற்குப்பின் விசாரணை இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடந்துள்ளது. பின்னர், அவரை உள்ளூர் பாகாயம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு, சிறை விதி 42ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டார். நேற்று இரவு , நீதிபதி முன் ஆஜர் செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரைப் பிணையில் எடுப்பதற்கான சட்டரீதியான முயற்சியில் இயக்கத் தோழர்களும், மற்ற தோழமை இயக்கங்களும், வழக்குரைஞர்களும் இன்று ஈடுபட்டுள்ளனர்.

கடந்த நான்கு வருடங்களாக தமிழகத்தில் செயல்பட்டு கொண்டிருக்கும் சேவ் தமிழ்சு இயக்கமானது, தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த இளைஞர்களை பெரும்பான்மையாகக் கொண்டுள்ள ஒரு அரசியல் இயக்கமாகும். ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாகவும் , பரமக்குடி, தருமபுரி இடங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான வன்கொடுமைக்கு எதிராகவும், கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் போராட்டத்திற்கு ஆதரவாகவும், பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளுக்கு எதிராகவும் செயல்பட்டு வரும் இவ்வியக்கம், மரண தண்டனை எதிர்ப்பு போராட்டத்திற்கும் ஆதரவாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு தொடர்ச்சியாகவே, சேவ் தமிழ்சு இயக்கத்தின் முன்முயற்சியினால் சிறையில் இச்சந்திப்பு நிகழ்ந்தது. இன்றைய சில நாளிதழ்களில் குறிப்பிடப்பட்டுள்ளது போல் இது மொபைல் போன் பேட்டரி, சார்ஜர்களை கடத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சி அல்ல. சம்பந்தப்பட்ட சார்ஜர், பேட்டரி இரண்டும் தோழர் சரவணக்குமாருக்கு சொந்தமானது. இது தவறுதலாக நடந்த சம்பவமே அன்றி எந்த உள்நோக்கமும் கிடையாது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.


இவண்,

இளங்கோவன் , செய்தி தொடர்பாளர் , 9884468039   
22/02/2013

Wednesday, February 20, 2013

காதலர் நாள் கொண்டாட்டங்கள் படங்களும் காணொளியும்

விழா மேடையை அலங்கரிக்கும் தோழர்கள்

சின்னஞ்சிறு கிளிகள்

புத்தர் கலைக்குழு பறை ஆட்டம்

இயக்குனர் பாலாஜி சக்திவேல் ‍ கேள்வி பதிலின் போது

பார்வையாளர்களில் ஒரு பகுதியினர்

அதிர வைத்த பறை இசை - புத்தர் கலைக்குழு

சாதி மறுப்பு மணம் புரிந்த காதலர்களுக்கு பரிசளிப்பு-1

லயோலா கல்லூரி மாணவர்களின் ஹிப்‍ ஹாப்

எழுத்தாளர் தமிழச்சி தங்கபாண்டியன்

நீண்ட பறை ஆட்டத்தில் ஒரு காட்சி

லயோலா கல்லூரி நடன மாணவர்களை சேவ் தமிழ்சு தோழர்கள்
வாழ்த்திய போது.

எழுத்தாளர் தமிழச்சி தங்க பாண்டியன் -  சாதி மறுப்பு மணம் புரிந்த காதலர்களுக்கு பரிசளிப்பு-2

தோழர் மனுஷ்யபுத்திரன் உரை

சாதி மறுப்பு மணம் புரிந்த காதலர்களுக்கு பரிசளிப்பு-3

லயோலா கல்லூரி நடன மாணவர்களை சேவ் தமிழ்சு தோழர் அருண் சொக்கன்
வாழ்த்திய போது ..

காதல் பறவைகளின் குழந்தைகள்

தோழர் ஓவியா -  சாதி மறுப்பு மணம் புரிந்த காதலர்களுக்கு பரிசளிப்பு

காதல் பறவைகளின் குழந்தைகள்



படங்கள் உதவி:   தோழர் உதயசங்கருக்கு நன்றி  

புத்தர் கலைக்குழு காணொளி:‍  நன்றி தோழர் செல்லையா முத்துசாமி



=====================


Thursday, February 14, 2013

காதலர் நாள் கொண்டாட்டம்


நமக்கே தெரியாம‌ல் என்றோ ஒருநாள் நமக்கு ஆதரவாக காதல்  பிறந்திருக்கும்..


           
நாமும் பல தருணங்களில் காதலிக்கப்பட்டிருப்போம்.
                                  காத‌லிக்க‌ப்ப‌ட்டு கொண்டிருக்கிறோம்.


  
                                வாருங்கள் காதல் மழையில் நனைய !!!

சாதி ஒழிப்புக்கான தேடல்!











Wednesday, February 13, 2013

முற்றுகைப் போராட்டம் தள்ளிவைப்பு


அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்


இடிந்தகரை 627 104

நெல்லை மாவட்டம்

மின்னஞ்சல்: koodankulam@yahoo.com

கைப்பேசி: 9865683735; 9842154073

... பிப்ரவரி 13, 2013



முற்றுகைப் போராட்டம் தள்ளிவைப்பு

Siege Protest Has Been Postponed



பிப்ரவரி 11, 2003 மாலையில் திடீரென கொடுங்காற்று வீசியதில் பல ஊர்களில் ஏராளமான படகுகள் பழுதடைந்திருப்பதாலும், அவற்றை மீனவ மக்கள் சீரமைத்துக் கொண்டிருப்பதாலும் பிப்ரவரி 15, 2013 அன்று திட்டமிடப்பட்டிருந்த முற்றுகைப் போராட்டம் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. விரைவில் புதிய நாள் குறிக்கப்பட்டு முறைப்படி அறிவிக்கப்படும்.



The siege protest that we had planned for February 15, 2013 has been postponed due to the heavy damages of boats in several fishing villages caused by the heavy winds on February 11, 2003. Since our comrades are mending their boats, we will announce a fresh date as soon as possible.



போராட்டக்குழு

அனுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்

The Struggle Committee

People’s Movement Against Nuclear Energy

Sunday, February 10, 2013

சட்ட நெறியைத் தூக்கிலிட்டதற்கு சமம் - அறிக்கை



அப்சல் குருவுக்கு தூக்கு
:
சட்ட நெறியைத் தூக்கிலிட்டதற்கு சமம்
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் அறிக்கை

2001 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தின் மீது நடைபெற்ற தாக்குதலில் தொடர்புபடுத்தப்பட்ட அப்சல் குருவை, இந்தியக் காங்கிரசு அரசு இன்று (09.02.2013) காலை யாருக்கும் தெரியாமல் தூக்கிலிட்டுக் கொன்றுள்ளது.

2001ஆம் ஆண்டு திசம்பரில் நடைபெற்ற, நாடாளுமன்றத் தாக்குதலில் ஈடுபட்ட 5 பேரும் அவ்வளாகத்திற்குள்ளேயே பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். 2005 ஆம் ஆண்டு ஆகத்து மாதம், இது தொடர்பாக நடைபெற்ற வழக்கில், பேராசிரியர் கிலானி விடுவிக்கப்பட்டார். அப்சான் குருவுக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அப்சல் குருவுக்கு மட்டும் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது.

தூக்குத் தண்டனையை உறுதி செய்த தீர்ப்பில் உச்சநீதிமன்றம், “அப்சல் குரு, பயங்கரவாத அமைப்பு எதிலும் உறுப்பினராக இல்லை; நாடாளுமன்றத் தாக்குதலில் நேரடியாக கலந்து கொள்ளவில்லை” என்று கூறியது. அத்துடன், “நாடாளுமன்றத்தைத் தாக்குவதற்கான சதித்திட்டம் நடைபெற்றக் கூட்டத்தில், அப்சல் குரு கலந்து கொண்டதற்கும் சான்று எதுவுமில்லை. ஆனால், நாடாளுமன்றத் தாக்குதல் நடத்தியவர்களோடு அப்சல் குருவுக்குத் தொடர்பு இருந்திருக்கிறது” என்று கூறியுள்ளது. ஆனாலும், தேசத்தின் கூட்டு மனச்சான்றை திருப்திப் படுத்த அப்சல் குருவுக்கு தூக்குத் தண்டனை வழங்குவது தேவையாக உள்ளது” என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

உச்சநீதிமன்றத்தின் இக்கூற்றின்படி பார்த்தால், அப்சல் குருவுக்கு சட்டநெறிப்படி தூக்குத் தண்டனை வழங்கப்படவில்லை. மக்கள் உணர்ச்சியை சமாதானப்படுத்தவே தூக்குத் தண்டனை வழங்கியிருக்கிறார்கள்.

உலகத்தில் இரண்டு வகைப்பட்ட நீதிமன்ற முறைகள் இருக்கின்றன. ஒன்று, நீதியை முதன்மைப்படுத்தும் நீதிமன்ற முறை. இதனை, Court of Justice என்பார்கள். இன்னொன்று, சட்ட நெறிக்கு முதன்மை கொடுக்கும் நீதிமன்ற முறை. இதனைCourt of Law என்பார்கள்இந்தியாவில் இருப்பது Court Of Law.

குற்றம்சாட்டப்பட்ட ஒருவரை விசாரிக்கும்போது, அந்நபர் குற்றம் செய்திருப்பார் என்பது நீதிபதிகளுக்குத் தெளிவாகத்தெரிய வந்த போதிலும், அதை மெய்பிக்கும் சாட்சியங்களும், சூழல்களும் இல்லாத போதும், பிறழ்சாட்சிகள் உருவாகிவிட்ட நிலையிலும், நீதிபதிகள் குற்றம் சாட்டப்பட்டவருக்குத் தண்டனை வழங்க முடியாது. இது தான், சட்டமுறைப்பட்ட நீதிமன்ற அமைப்பாகும். இந்தியாவில் இருப்பது, சட்டவழிமுறைக்கு முதன்மை கொடுக்கும் Court of Law முறையாகும்.

ஆனால், அப்சல் குருவுக்கு உச்சநீதிமன்றம் வழங்கியது, சட்டவழிப்பட்ட நீதிமன்ற முறையில் அல்ல. நீதிபதிகள், மக்கள் உணர்ச்சி மற்றும் தங்களுக்கு இருந்த நாட்டுப்பற்று ஆகியவற்றின் காரணமாக, தூக்குத் தண்டனை வழங்கியிருக்கிறார்கள். இத்தண்டனை, Court of Justice முறையிலும் வரவில்லை. Court of Law முறையிலும் வரவில்லை. நீதிபதியின் விருப்பு – வெறுப்பு சார்ந்த, வழிமுறையில் வந்துள்ளது.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, இந்தியா உள்பட உலகெங்கும் மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. அந்த நிலையிலும், அப்சல் குருவுக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனையை எதிர்க்கிறோம். அத்துடன், இந்தியாவில் உள்ள சட்டவழிமுறைகளுக்குப் புறம்பாக நீதிபதிகள் விருப்பம் சார்ந்து தூக்குத்தண்டனை வழங்கப்பட்டதையும் எதிர்க்கிறோம்.  

அப்சல் குருவுக்கு சட்டவழிமுறைக்குப் புறம்பாக மரண தண்டனை வழங்கப்பட்டிருக்கும் தவற்றை, குடியரசுத் தலைவர் பொது மன்னிப்பு வழங்குவதன் மூலம் திருத்தியிருக்க வேண்டும். அந்தக் கழுவாயையும் கடைபிடிக்காமல், அவசர அவசரமாக, அவருடைய மனைவிக்குக் கூட தெரிவிக்காமல், இன்று (09.02.2013) காலையில் தூக்கிலிட்டிருப்பது, சட்டநெறிகளைத் தூக்கிலிட்டதற்கு சமமாகும். இந்த அரச அராஜகத்தைத் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

உச்சநீதிமன்றம் கூறிய கூட்டு மனசாட்சி என்பது, இந்துத்வா வெறி சக்திகளின் மனசாட்சி தவிர வேறல்ல. இந்துத்வா வெறியில் பாரதிய சனதா கட்சியுடன் போட்டியிட்டு, கூடுதல் வாக்கு வாங்க வேண்டும் என்ற பதவி வெறிதான் காங்கிரசு ஆட்சியாளர்களிடம் மிகுதியாக உள்ளது என்பதை அப்சல் குருவுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றிய முறை வெளிப்படுத்துகிறது.

நீதிபதிகளின் விருப்பு வெறுப்பு சார்ந்தும், இந்துத்வா வெறி சக்திகளின் கூச்சலுக்குப் பணிந்தும், தூக்குத் தண்டனை வழங்குவதும் நிறைவேற்றுவதும் எதிர்காலத்தில், எத்தனையோ அப்பாவி மக்களை, பழிவாங்குவதற்கான முன்னோட்டமாக அமைந்துள்ளது.

இந்தியா உட்பட உலகெங்கும் மரணதண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்பது த.தே.பொ.க.வின் உறுதியான நிலைபாடு. இங்கு நாம் சுட்டிக்காட்ட விரும்புவது அப்சல் குருவுக்குத் தூக்கு தண்டனை வழங்கியதும் அதை நிறை வேற்றியதும் இந்தியாவில் உள்ள சட்ட நடைமுறை பின் பற்றப்படவில்லை என்பதாகும்.

இந்திய நாட்டு மக்கள், இவ்வாறான பழிவாங்கும் சட்டக் கொலைகள் இனியும் தொடராமல் தடுக்க கிளர்ந்தெழ வேண்டும். அப்சல் குருவுக்குத் தூக்குத் தண்டனை வழங்கியதிலும், அதை நிறைவேற்றியதிலும் நடந்த சட்ட விரோதச் செயல்களைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுப்பதற்கு, குடியரசுத் தலைவர் தற்சார்புள்ள, உயரதிகாரம் படைத்த விசாரைணை ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும் என்றுக் கேட்டுக் கொள்கிறேன்.


இவண்,                                                                               
                                                                           பெ.மணியரசன்
தலைவர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி
இடம்: சென்னை



(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு)

அணுமின் நிலையத்தை இயக்கினால், முற்றுகையிட்டு சிறை நிரப்புவோம்!


அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்

இடிந்தகரை 627 104

திருநெல்வேலி மாவட்டம் பிப்ருவரி 10, 2013

அணுமின் நிலையத்தை இயக்கினால், முற்றுகையிட்டு சிறை நிரப்புவோம்!



சனநாயகப் பண்புகளை, நடைமுறைகளை முற்றிலுமாகத் தூக்கியெறிந்துவிட்டு, மக்கள் கேட்கும் எந்தத் தகவல்களையும் தராது, தமிழக மக்களை கடுகளவும் மதிக்காது, பழுதுபட்ட கூடங்குளம் அணுமின் நிலையத்தை மத்திய அரசு இயக்க எத்தனித்தால், அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் தலைவர்கள் உதயகுமார், புஷ்பராயன், மை. பா. சேசுராசு, முகிலன் மற்றும் ஆயிரக்கணக்கான குழந்தைகள், பெண்கள், ஆண்கள் கூடங்குளம் அணுமின் நிலயத்தின் முன்னால் அறவழியில் முற்றுகையிட்டு சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபடுவோம். எங்களுக்கு ஆதரவு தருகிற தன்மானமிக்க தமிழ் மக்கள் தமிழகமெங்கும் சிறை நிரப்பும் போராட்டங்களை நடத்திட அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

கூடங்குளம் திட்டத்தை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளச் செய்யவேண்டும் என்பதற்காக கடுமையான செயற்கை மின்வெட்டை நம் மீது திணித்து; கொசுத் தொல்லையாலும், தூக்கமின்மையாலும், டெங்கு போன்ற நோய்களாலும் மக்களை சித்திரவதை செய்து; சிறு, குறு தொழிலதிபர்கள், தொழிலாளர்களைக் கொடுமைப்படுத்தி ஒரு மிகப் பெரிய அழிவை மத்திய, மாநில அரசுகள் நடத்திக் கொண்டிருக்கின்றன. இதோ வருகிறது, அதோ வருகிறது, பதினைந்து நாளில் வரும் என்று பிரதமர், முதல்வர், அமைச்சர்கள் எனப் பலரும் கதை சொல்லியும், இதுவரையில் மின்சாரம் வரவில்லை, கசிவுதான் வருகிறது.

உலகத்தரம் வாய்ந்த, உன்னதமான, ஏழடுக்கு பாதுகாப்பு கொண்ட, அப்துல் கலாம், முத்துநாயகம், இனியன், எம். ஆர். ஸ்ரீநிவாசன், சரத்குமார் என எண்ணற்ற அறிஞர்கள் நற்சான்றிதழ் வழங்கிய கூடங்குளம் அணுமின் நிலயத்தின் குழாய்களில், வால்வுகளில் எல்லாம் பழுதுகள் ஏற்பட்டிருப்பதாக அமைச்சர் நாராயணசாமி அண்மையில் தெரிவித்தார். இதற்கிடையே ரஷ்ய அரசு தனது அணுமின் நிலையத் திட்டங்களுக்கு தரம்குறைந்த உபகரணங்களை வழங்கிய குற்றத்துக்காக ஜியோ போல்ஸ்க் எனும் நிறுவனம் பற்றி விசாரணை நடத்தி அதன் தலைவரை கைது செய்திருக்கிறது. இப்படி பொய்கள், புரட்டுக்கள், திருட்டுக்கள், தொழிற்நுட்பப் பிரச்சினைகள் என தத்தளித்துக்கொண்டிருக்கும் கூடங்குளம் அணுமின் நிலையம் பற்றிய உண்மைகளைச் சொல்லுங்கள், எங்கள் உயிரோடு விளையாடாதீர்கள், ஒரு வெள்ளை அறிக்கைத் தாருங்கள் எனக் கேட்டோம்.

தனி நபருக்கு அறிக்கைத் தரவேண்டிய அவசியமில்லை என்று அமைச்சர் நாராயணசாமி எங்கள் கோரிக்கையை நிராகரித்தார். நாங்கள் தனி நபர்கள் அல்ல; கூடங்குளம் காவல் நிலையத்தில் மட்டும் 325 வழக்குகள் 5,296 பேர் மீது பெயர் குறிப்பிட்டும், 2,21,483 பேர் மீது பெயர் குறிப்பிடாமலும் பதிவு செய்யப்பட்டுள்ளன. ராதாபுரம், பழவூர் காவல் நிலையங்களில் மேலும் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முகமது கசாப் மீது ஒரே ஒரு தேசத்துரோக வழக்கும், ஒரே ஒரு தேசத்தின்மீது போர் தொடுத்த வழக்கும்தான் போடப்பட்டன. ஆனால் எங்கள் மக்கள் 8,456 பேர் மீது 19 தேசத்துரோக வழக்குகள் போடப்பட்டுள்ளன; 13,350 பேர் மீது தேசத்தின்மீது போர் தொடுத்த வழக்குகள் சுமத்தப்பட்டுள்ளன. இவ்வளவு பெரிய மக்கள் கூட்டமான எங்கள் தமிழ் மக்கள் பாதுகாப்பு கருதித்தான் கேட்கிறோம் என்று மன்றாடிக்கொண்டிருக்கிறோம்.

எங்கள் தமிழர்களைக் கொன்ற ராஜபக்சே இங்கே வரக்கூடாது என்று தமிழ் மக்கள் போராடுவதை அப்படியே நிராகரிக்கும் மத்திய அரசு, அதே பாணியில் ரவி பூஷண் குரோவர் என்று யாரோ ஓர் அணுசக்தித் துறை அதிகாரியை வைத்து தில்லியிலிருந்து பதில் சொல்லியிருக்கிறது. ஓரிரு தினங்களில் கூடங்குளம் அணுமின் நிலையம் இயங்கத் துவங்கும் என்று அவர் அறிவித்திருக்கிறார். முகமது கசாப், அப்சல் குரு போன்றோரை அதிரடியாக, அவசரம் அவசரமாக, இரகசியமாகத் தூக்கிலிட்ட மத்திய அரசு, அதே பாணியில் பழுதுபட்ட, பாதுகாப்பற்ற, ஆபத்தான கூடங்குளம் அணுமின் நிலையத்தை இயக்கலாம்.

தமிழர்கள் உணர்வுக்கோ, உயிருக்கோ மத்திய அரசும், காங்கிரசு கட்சியும் எந்த மதிப்பும் அழிப்பதில்லை. அதே போல தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. போன்ற கட்சிகளும் தமிழ் மக்களைப் பற்றி கவலைப்படவில்லை, தமிழர்கள் பரிசளிக்கவிருக்கும் 40 பாராளுமன்றத் தொகுதிகளுக்குக்காகத்தான் நாக்கைத் தொங்கவிட்டுக்கொண்டு அலைகிறார்கள்.

மத்திய அரசோ, மாநில அரசோ, இவற்றை நடத்துகிற தி.மு.க., அ.இ.அ.தி.மு.க., காங்கிரசு கட்சிகளோ கண்டுகொள்ளாத நிலையில், கூடங்குளம் அணுமின் நிலையம் எப்போது திறக்கப்பட்டாலும், போராடுகிற ஆயிரக்கணக்கான குழந்தைகள், பெண்கள், ஆண்கள் நடந்து சென்று அணுமின் நிலயத்தின் முன்னால் அறவழியில் முற்றுகையிட்டு சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபடுவோம். தமிழ் மக்கள் ஆதரவு தரவேண்டும் என்று மீண்டுமொருமுறை அன்புடனும், உரிமையுடனும் கேட்டுக்கொள்கிறோம். இந்த இறுதிப் போராட்டத்தினால் எழுகிற விளைவுகளுக்கு தமிழகத்தை ஆளும் அ.இ.அ.தி.மு.க. அரசும், மத்தியில் ஆளும் காங்கிரசு-தி.மு.க. அரசும் முழுப் பொறுப்பேற்க வேண்டும்

--------

தெலுங்கானா ‍ வரலாற்றுத் தேவை: அரங்கக் கூட்டம்



கடந்த சனவரி 26 சனிக்கிழமை அன்று சென்னை லயோலா கல்லூரியில்

சேவ் தமிழ்சு தோழர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட "தெலுங்கானா வரலாற்றுத் தேவை" குறித்த கூட்டத்தில் எடுத்தாளப்பட்ட கருத்துரைகள், காணொளிகள், மற்றும் புகைப்படங்கள்.






தோழர் சுரேசு உரை:‍


ஆந்திர மக்கள் சிவில் உரிமை கழகத்தில் தலைவர், தோழர். சுரேசு அவர்கள் தெலங்கானா மாநிலம் ஏன் இப்பொழுது உருவாக்கப்படவேண்டும், அதற்கான வரலாற்று தேவை என்ன என்பதை பற்றி பேசினார். தோழர்.சுரேசு அவர்கள் தெலங்கானா பகுதியைச் சேராத நெல்லூரில் (ஆந்திர மாநிலம்) பிறந்து வளர்ந்தவர். தெலங்கானா பகுதி தவிர்த்த ஆந்திராவில் மக்கள் இயக்கங்களை உங்களால் பார்க்க முடியாது என அவர் கூறினார். மேலும் அவர் கூறுகையில் "இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் அதனுடன் சேராத மூன்று மன்னராட்சி பகுதிகளில் இன்றைய தெலங்கானா பகுதியும் ஒன்று, அன்று அது ஹைதராபாத் மாநிலம் என்றைழைக்கப்பட்டது. இந்தியாவுடன் இணையாத மற்ற பகுதிகள் காசுமீர், பரோடா சமஸ்தானமாகும். மேலும் ஆந்திர மாநிலம் கூட 1956ல் தான் உருவாக்கப்பட்டது. அதாவது இந்தியா சுதந்திரம் அடைந்து எட்டு ஆண்டுகள் தெலங்கானா தனி மாநிலமாகத்தான் இருந்தது. இந்த தனி மாநிலத்தை தான் அவர்கள் கேட்கின்றார்களே தவிர புதிதாக ஒரு மாநிலத்தை அவர்கள் உருவாக்கச்சொல்ல வில்லை என தெலங்கானாவின் வரலாற்றை விரிவாக‌க்கூறினார். தெலங்கானா இயக்கம் ஒரு பிரிவினைவாத இயக்கம் என்று சொல்கின்றார்களே என்ற கேள்விக்கு அவர் "ஆந்திர மாநிலம் கூட சென்னை மாகாணத்தை பிரித்து தான் உருவாக்கப்பட்டது. அப்படியானால் ஆந்திர மாநில உருவாக்கத்திற்கு போராடியவர்கள் எல்லாம் பிரிவினைவாதிகளா? என்றால் இல்லை, அப்படியானால் எப்படி தெலங்கானா கோரிக்கை மட்டும் எப்படி பிரிவினைவாதக் கோரிக்கையாகும்" என கேட்டார். "தெலங்கானா பகுதி எப்பொழுதும், எல்லாவற்றிலும் உரிய பங்கு கிடைக்காமல் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டே வந்துள்ளது. வேலையானாலும் சரி, விவசாயமானாலும் சரி, அரசியலானாலும் சரி புறக்கணிப்பே தெலங்கானாவின் வரலாறு, இதனால் 1969ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் உருவான தனி மாநில கோரிக்கைக்கான மக்கள் இயக்கம், தெலங்கானா பகுதியின் மூலை, முடுக்கெங்கும் பரவியது. மேலும் இன்று வரை இவ்வியக்கம் மக்கள் கையில் தான் உள்ளதேயன்றி அரசியல்வாதிகள் கைகளிலல்ல..என்று தெலங்கானா கோரிக்கை எவ்வாறு உருவாகியது என விளக்கினார். மேலும் ஆந்திர மாநிலம் உருவாக்கப்பட்டதன் பின்னால் உள்ள அரசியலைப் பற்றி பேசும் பொழுது, அவர் பின்வருமாறு கூறினார். அதாவது ஆந்திர பிரதேசம் உருவாக்கப்பட்ட போது நேரு பின்வருமாறு கூறினார் "தெலங்கானா மக்கள் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக உணர்ந்தால் எப்பொழுது வேண்டுமென்றாலும் அவர்கள் ஆந்திராவிடமிருந்து பிரிந்து தனிமாநிலமாகலாம் என்றார்". மேலும் அரசியலமைப்பை எழுதிய அம்பேத்கர், பிரிவு 3ல் எந்த ஒரு பகுதியாவது தாங்கள் தற்பொழுது இருக்கும் மாநில அரசில் இருந்து பிரிய வேண்டுமென்றால் பிரிந்து தனி மாநிலமாக மாறலாம், மத்திய அரசு பாராளுமன்றத்தில் ஒரு சட்டத்தை போடுவதன் மூலம் இதை செய்ய முடியும் என எழுதினார். இந்த அடிப்படையிலேயே சட்டீசுகர், உத்தராஞ்சல், ஜார்கண்ட் போன்ற மாநிலங்கள் எல்லாம் இந்த வழியிலேயே உருவாக்கப்பட்டன. ஆனால் தெலங்கானா தனி மாநில கோரிக்கையை தள்ளிப்போட வேண்டும் என்ற நோக்கிலேயே இங்கு மட்டும் "மாநில சீரமைப்பு ஆணையத்தை" மத்திய அரசு உருவாக்கியது என அவர் கூறி தன் உரையை நிறைவு செய்தார்.





தோழர்.சீதாராமலு உரை:‍

 "ஒடுக்கப்பட்ட மக்களின் கூட்டுணர்வின் வெளிப்பாடே தெலங்கானா கோரிக்கையாகும், இந்த கோரிக்கைக்கு கிடைத்தது போல‌ பல கட்சி ஆதரவு வேறு எந்த கோரிக்கைக்கும் கிடைத்தது இல்லை. இவையெல்லாம் இருந்தாலும் உயர் வகுப்பினரின் நிர்பந்தத்தினாலும், சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளினாலும், காங்கிரசு தலைமையிலான மத்திய அரசினாலும், ஹைதராபாத்தில் உள்ள தங்கள் அரசியல், பொருளாதார காரணிகளினால் தங்களுக்குள் ஒற்றுமையில்லாமல் இருக்கும் தெலங்கானா அரசியல்வாதிகளினாலும், மக்களின் உளவேட்கையை சரியாக பிரதிபலிக்கத் தெரியாத தெலங்கானா அரசியல்வாதிகளினாலும், நேரு காலத்திலிருந்து இன்றுவரை வெறும் வாக்குறுதிகளை கூறி தெலங்கானா மக்களுக்கு துரோகம் இழைத்து வரும் காங்கிரசு கட்சியினாலும் தான் தெலங்கானா உருவாக்கும் தாமதமாகி வருகின்றது என்று தோழர்.சீதாராமலு கூறினார்". தற்பொழுது உள்ள அரசுகள் நடைமுறைப்படுத்தும் முதலாளித்துவ, தனியார்மய நிலையைப் பற்றி அவர் கூறுகையில் "இன்றைய உலகமய காலத்தில் மக்கள் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளப்படுவதே இல்லை, அவர்கள் சிந்திப்பதெல்லாம் முதலாளிகளைப் பற்றி மட்டுமே" என கூறினார், மேலும் இறுதியாக அவர் கூறும் பொழுது "ஒரு இயக்கம் 10 ஆண்டுகளை நிறைவு செய்து விட்டால், அது அதன் இலக்கை எட்டிவிடும், அது போலவே தெலங்கானா இயக்கமும் உலகமயத்தையும், சனநாயகத்திற்கு எதிரான ஆற்றல்களையும் வென்று அதன் இறுதி இலக்கை அடையும்" என்றார். மேலும் அவர் பாராளுமன்ற உறுப்பினரான திரு.தொல் திருமாவளவனிடம் நீங்கள் இந்த பிரச்சனையை பாராமன்றத்திலும் விவாதிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

தோழர் தியாகு உரை:

தெலுங்கானா ஒரு வரலாற்றுத் தேவை historic necessity என்பதை விட historical necessity என்பதே சரியாக இருக்கும்.காரணம் என்பது போராட்டங்களில இறுதிக்கட்டம் என்றஒன்று இல்லை. வரலாறு என்பதற்கு வந்த வழி என்று பொருள்.தனி தெலுங்கானா கிடைத்து விட்டாலும் கூட இந்த போராட்டம் நின்று விடப் போவதில்லை.தனிதெலுங்கானா அமைந்து விடுவதானால் உழவர்களுக்கு நிலம் கிடைத்து விடுமா? சமூகவிடுதலை கிடைத்து விடுமா ? அனைவருக்கும் கல்வி கிடைத்து விடுமா ? அடிப்படைதேவைகள் கிடைத்து விடுமா?.போராட்டம் என்பது ஒரு ஆறு போல. வளைந்து நெளிந்து பள்ளம் மேடுகளைக் கடந்து கரைகள் தொட்டுவந்து சேரக்கூடியவை. இப்போராட்டங்களை அதன் அரசியல் பொருளியல் பண்பாட்டுக்கூறுகளோடு புரிந்து கொள்ள வேண்டும். சமூக சனநாயக விடுதலைகக்கான ஒரு நீண்ட நெடிய போராட்டத்தில் தனி தெலுங்கானா போராட்டம் என்பது ஒரு கட்டம்,இதைக் கடக்காமல் அடுத்த கட்டத்திற்கு பயணிக்க முடியாது.



நிசாம் மன்னனுக்கு எதிரான தெலுங்கானா போராட்டம் இன்று இந்திய தேசிய வல்லாதிக்கத்துக்கு எதிரான ஒரு போராட்டமாக வளர்ந்த்துள்ளது. ஆனால்இத்தெலுங்கானா போராட்டம் ஒரு தெலுங்கு தேசிய இனப்போராட்டமாக பரிணமிக்கவில்லை.நிலத்தையும் ஆறுகளையும் மலையையும் காக்கும் ஒரு போராட்டமாகவே அமைந்திருந்தது.இப்புரிதல் அங்கிருந்து கம்யூனிஸ்டுகளுக்கு அப்போதுஇல்லை.அங்கே இருந்த முற்போக்கு தேய்ந்து தேய்ந்து ஒரு தேக்க நிலை ஏற்பட்டது.ஒருகட்டத்தில் விசாலாந்திரா என்பது மொழிவழியில் அமைந்ததே தவிர அங்கே மக்களாட்சி அமையவில்லை. தெலுங்கானா போராட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் பலர் தெலுங்கானா பகுதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல. சுந்தரய்யாவிலுருந்து ஆரம்பித்து பலர்ஆந்திர பகுதியைச் சேர்ந்தவர்களும் இதில் அடங்குவர்.ஏறத்தாழ நமது ஈழப்போராட்ட வரலாற்றில் நமக்கு சிங்களவர்களால் ஏற்பட்ட வஞ்சகம் துரோகம் சூழ்ச்சி என எல்லாவற்றிற்கும் இணையான ஒரு வரலாறு தெலுங்கானா போராட்டத்திற்கு இருக்கிறது.மோசடிக்கு பெயர் பெற்ற நேரு குடும்பத்தால் முழுதும் வஞ்சிக்கப்பட்ட ஒரு போராட்டமாக இது இருக்கிறது..

வீட்டை நாட்டுக்கு கொடுத்து நாட்டை வீட்டுக்கு எடுத்துக் கொண்ட ஒரு குடும்பம் நேரு குடும்பம்நமது ஈழப்போராட்டத்திற்காக 17 இளைஞர்கள் தீக்குளித்தார்கள்.தெலுங்கானா போராட்டத்திலும் வீரம்மிக்க இளைஞர்கள்  பலர் தீக்குளித்திருக்கிறார்கள்ஈழப்போர் நடந்து கொண்டிருந்த வேளையில், தமிழர்களுக்கு ஆதரவாக மற்ற மாநிலங்களில் ஒரு குரல் கூட எழவில்லை என நாம் வருத்தப்பட்டது உண்டு. அதே சமயம், நாம் மற்ற மாநிலங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மக்கள் போராட்ட்டத்திற்கு ஆதரவளித்ததுண்டா என்பதையும் நாம் எண்ணி பார்க்க வேண்டும். 2009ம் ஆண்டு முதல் செயல்பட்டு கொண்டிருக்கும் தமிழர் பாதுகாப்பு (சேவ் தமிழ்சு) இயக்கம், ஈழப்போராட்டம் பற்றி பேச ஹைதராபாத் சென்றார்கள்அவர்களோடு நானும்சென்றிருந்தேன்ஆந்திரத் தோழர்களோடு அப்போது ஏற்பட்ட ஒரு நட்பு தான் அவர்களை தெலுங்கானா பற்றி பேச வைத்திருக்கிறது.

இதோடு நின்று விடாமல்தொடர்ந்து மக்கள் போராட்டங்கள் குறித்து கல்வியைப் பரப்புவோம்மக்கள் அமைப்பாகத் திரள்வோம்நமது உடன்பிறந்த சகோதர்களின் விடுதலைக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம்.

காணொளியின் சுட்டி:‍


தோழர் தொல்.திருமாவளவன் உரை:-

இது ஒரு நல்ல முயற்சிபாராட்டுதலுக்குரிய முயற்சிஇந்த அரசியல் உறவு போராட்டக்களத்திலும் மலர வேண்டும்தமிழர்களுக்கு தமிழர்கள் தான் போராட வேண்டும்.தெலுங்கர்களுக்கு தெலுங்கர்கள் தான் போராட வேண்டும் என்ற ஒரு பார்வைமக்களிடத்திலே இருக்கிறதுஅவ்வகையில் இப்போராட்டத்தை ஒழுங்கு செய்த சேவ்தமிழ்சு இயக்கத்திற்கு என் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன்.

முள்ளிவாய்க்கால் படுகொலை நிகழ்ந்த போதுமனித நேயத்தின் அடிப்படையிலாவதுஅதை தடுத்து நிறுத்த ஆதரவு திரட்ட எண்ணினோம்கொள்கை அடிப்படையில் கூட கேட்கவில்லைஆனால் நாடாளுமன்றத்தில் ஈழப்பிரச்சினையா அதை தமிழன் தான் பேசவேண்டும்மற்ற வட இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதைப் பற்றி மனித நேயஅடிப்படையில்  கூட பேசவில்லைமனிதம் என்ன செத்துப் போய்விட்டதா ?

இங்கே ஜெய் தெலுங்கானா என்று இத்தோழர்கள் முழங்கிய போது எனக்கும் ஜெய்தெலுங்கானா என்று உரத்துக் கூற வேண்டும் என்ற உணர்வு வந்ததுதெலுங்கானாபோராட்டத்தில் எனக்கு 100 விழுக்காடு உடன்பாடு இருக்கிறதுஏனெனில்மாணவப்பருவத்திலிருந்து இப்போராட்டம் குறித்து கேள்விப்பட்டிருக்கிறேன்பலகூட்டங்களில் இது குறித்து பேசுவதைக் கேட்டிருக்கிறேன்.

ஆகவே இக்கூட்டம் குறித்துசேவ் தமிழ்சு இயக்கத் தோழர்கள் என்னை அணுகிய போது,எவ்வித தயக்கமோ அச்சமோ இன்றி உடனடியாக ஒப்புதல் அளித்தேன்தனி நாடுக்கானகோரிக்கையையே ஆதரிக்கும் விடுதலை சிறுத்தைகளுக்கு தனி மாநிலமென்ன ? தமிழீழம்வேண்டி போராடிக்கொண்டிருப்பவர்கள் தனி தெலுங்கானா கோருவதில் ஏன் மறுப்புஇருக்கப்போகிறதுதெலுங்கானா தனிநாடு கோரிக்கை அல்லஅவர்கள் இந்தியஅரசியலமைப்பு சட்ட விதிகளுக்குட்பட்டுதனி மாநில இறையாண்மைக்காக தான்போராடுகிறார்கள்ஆகவே இப்போராட்டம் சட்ட விரோதமல்லஆனால் இங்கிருக்கும்ஆட்சியாளர்களுக்கு இதில் தயக்கம் ஏன் ?
இப்போராட்டத்திற்கான எதிர்ப்பும் ஆதரவும் எந்த தளத்திலிருந்து வருகிறது என பார்த்தால்,உயர்சாதி இந்துக்களும் நிலப்புரபுக்களும்அரசியல் அதிகாரமிக்கவர்களும் இக்கோரிக்கையை எதிர்க்கின்றனர்தனி தெலுங்கானாதெலுங்கு தேசத்தை பாதித்து விடும்என கூச்சலிடுகின்றனர்எல்லாமே அரசியல் பிரச்சினை தான்கல்விநதீ நீர்மாநிலஉரிமைகள் என எல்லாவற்றிலும் அரசியல் இழையோடிக் கொண்டிருக்கிறது.அரசியல் லாபநட்டக்கணக்கின் அடிப்படையில் தான் தீர்வுகளும் போராட்டங்களும் எதிர்ப்புகளும்உருவாகின்றனஒரு போராட்டத்திற்கு எப்போது ஆதரவு பெருகுகிறது என்றால் எப்போதுஅரசியலில் இலாபக்கணக்கு கூடுகிறது அங்கு ஆதரவும் கூடுகிறதுஎல்லாமே லாபநட்டக்கணக்கின் அடிப்படையில் தான்.இதே நிலை தான் தெலுங்கானா போராட்டத்திற்கும்.ஆளும் வர்க்கமும் உயர் சாதி இந்துக்களும் தெலுங்கானா பிரிவதால் யாருக்கு இலாபம்என்று கணக்கு பார்க்கின்றனர்.தெலுங்கானா உருவாவதால் யார் முதல்வர் ஆவார்அதி ல்அவர்களுக்கென்ன அரசியல் இலாபமிருக்கிறதுகாங்கிரசு அரசிற்கு என்ன லாபம்தேர்தல்வரும் நேரத்தில் தெலுங்கானா உருவாக்கினால் ஏதேனும் லாபம் கிடைக்குமா ? கடலோர ஆந்திரா என்றழைக்கக்கூடிய சீமாந்திர‌ பகுதியில் காழ்ப்பு நேருமா ? என எல்லாம் இலாபநட்டக்கணக்கின் அடிப்படையில் தான்.



---------------