Thursday, November 19, 2009

வாழ்வை அர்பணிபோம்.. எம் மாவீரர்களுக்கு!

நண்பர் யுவன் எழுதியது.....

வாழ்வை அர்பணிபோம்.. எம் மாவீரர்களுக்கு!




தானே தன் தோற்றம் அறியாத
பழமை வாய்ந்தது இத் தமிழ் மரம்
இன்று இதனை ஒட்டிப் பிழைக்கவந்த
மலையாளிகளும் சிங்களவனும் ஆரியர்களும்
இத் தமிழ் மரத்தின் வேரை சாய்த்திட துடிக்கிறார்கள்
முள்ளிவாய்க்கால் கரையில் எம் தமிழச்சியின் வயிற்றில் இருந்த கருவின் குறுதியினையும் உறிஞ்சிக் குடித்த இரத்தக் காட்டேறி கருணாக்கள்
இன்று எம் தெய்வத்துறவிகளின் தியாகத்தை
கொச்சைப் படுத்தி முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர்..
மலேசிய, மலையக, தமிழக, ஈழ, இலண்டன், கனேடிய
இசுலாமிய, கிறித்துவ தமிழன் என்று கூறு போட்டு
இத் தமிழ் மரத்தில் வேற்றுமை விதைக்கிறார்கள் நம் எதிரிகளும் துரோகிகளும்
இன்னும் பல நுற்றாண்டு காலம் இத்தமிழ் மரத்தை வளப்படுத்தி காத்திடும் பணி
இன்று உலகெங்கும் பரவி வாழும்
எம் தமிழ் இளையோர்கள் கையில் மட்டுமே உள்ளது
அறியாமையும் வேற்றுமையும் கொன்று இத்தமிழ் மரத்திற்கு
ஒரு தேசத்தை கட்டி எழுப்பும் பொறுப்பும் எம் இளையோரிடமே கொடுக்கப்பட்டுள்ளது உழைத்திடு வோம் எம் இளைய உறவுகளே எம் தேசத்தை கட்டி எழுப்பிட!!
தமிழர் வாழ்வில் புனித நாள் இம் மாவீரர் நாள்!!
தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளை வணங்கிடுவோம்.. தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம்!!

ஓர் பதிவருக்கு நமது பதில்...

நம்மைப் பற்றி ஓர் வலைப்பூவில் இவ்வாறாக குறிப்பிடப்பட்டிருந்தது...

" அந்த மௌன ஊர்வலத்திலும், கஸ்பரின் இன்னபிற கூட்டங்களிலும் அவரது ஆதரவாளர்களாக இருந்தவர்களில் அதிகபட்சம் பேர் ஐ.டி. இளைஞர்கள்தான். மாநிலம் முழுவதும் ஒருவித கொந்தளிப்பான சூழல் நிலவிய அக்காலக் கட்டத்தில் ஐ.டி. இளைஞர்களும் குற்றவுணர்வு காரணமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தார்கள். கேள்வியில்லாமல் திடீர் திடீரென வேலையை விட்டுத் தூக்கப்படும் தங்களின் சொந்த பிரச்னைக்காகக் கூட போராட வீதிக்கு வராத அவர்கள், ஈழத்தில் நடந்த மக்கள் படுகொலைகளைப் பொறுக்க முடியாமல் முதல் முறையாகப் போராடத் துணிந்தார்கள். ஆனால் அவர்களது அரசியல் குறைபாடு காரணமாக போராட்டத்தின் வடிவங்களும், தன்மையும் அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. அந்த இளைஞர்களை வாகாக கையில் எடுத்தார் கஸ்பர். ‘துப்பாக்கிகளுக்கு இதயமில்லை - உங்களுக்கு’, ‘ஈழம் - கண்ணீர் தேசம்’ என்பது மாதிரியான அரசியலற்ற/ மய்யப்படுத்தப்பட்ட மனிதாபிமான வாசகங்கள் அடங்கிய டி-சர்ட்டுகளை அந்த இளைஞர்களுக்கு அணியத்தந்து ஒரு டி-சர்ட் புரட்சி நடத்தினார். ‘ஏதாச்சும் செய்யனும் பாஸ்’ என்று வந்த இளைஞர்களுக்கு அதுவே போதுமானதாக இருந்தது. ‘நாமும் போராடிவிட்டோம்’ என்ற திருப்தி அவர்களுக்கும், ‘எப்பூடி அடக்குனோம்?’ என்ற வெற்றிக் களிப்பு கஸ்பருக்கும் கிடைத்தது. (போராட வந்த ஐ.டி. இளைஞர்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக இதைச் சொல்லவில்லை. அதன் பிறகும் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் சிலரை எனக்குத் தெரியும். ஆனால் பெரும்பகுதியானவர்கள் அத்தோடு திருப்தியடைந்து ஒதுங்கிக்கொண்டார்கள்)."
இதற்கு "சேவ் தமிழ்" சார்பாக கீழ் வருமாறு நம் நிலையை தெளிவுப்படுத்தியுள்ளோம்....
வணக்கம்,

IT இளைஞர்கள் சார்பாக எங்கள் பதிலை பதிவு செய்யலாம் என்று நினைக்கிறோம்.

இது வரை IT துறையினர் சார்பாக நடத்தப் பட்ட ( உண்ணாவிரதம், நீதி வேண்டி பேரணி, இலங்கையில் மனித உரிமை மீறல்கள் - கருத்தரங்கம், திசநாயகம் கைதுக்கு எதிராக பத்திரிகையாளர் கண்டன ஆர்ப்பாட்டம்) எந்த ஒரு நிகழ்வும் யாருடைய வழிகாட்டுதலின் பெயரிலும் நடத்தப் பட வில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த நிகழ்வுகளில் பங்கு கொள்ளவும் உரையாற்றவும் அரசியல் தவிர்த்து அனைத்து தரப்பிலிருந்தும் முக்கியமானவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.எங்கள் நிகழ்ச்சிகளில் விடுதலை ராசேந்திரன், தியாகு போன்றவர்களையும் அழைத்திருக்கிறோம்.

வேறு எந்த ஒரு அமைப்பும் ஈழம் தொடர்பாக ஆர்ப்பாட்டங்கள் நடத்தினால், அதில் பங்கு கொள்ள முயற்சித்திருக்கிறோம்.

உதாரணமாக..

தேர்தல் சமயத்தில் சிதம்பரத்திற்கு எதிரான பரப்புரை

நாம் அமைப்பின் அமைதி பேரணி

செங்கல்பட்டு சட்டக் கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம்

மாணவர்கள் மாநாடு - முத்துக்குமார் எழுச்சிப் பாசாறை

தமிழின பாதுகாப்பு மாநாடு

'The Hindu' விற்கு எதிராக கண்டன கூட்டம்.

T- Shirt விசயத்திலும் தவறான தகவலே உங்களுக்கு கிடைத்திருக்கிறது. டி-சர்ட் வெளியிட்ட போது ஜெகத் கஸ்பருடன் எங்களுக்கு அறிமுகமே கிடையாது.

எங்கள் பதிலை உங்கள் பதிவில் சேர்ப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்

நன்றி

Save-Tamils

Conference on Media Responsibility in Coimbatore